டாங்கிரெக் மலைகள்
Appearance
டாங்கிரெக் மலைகள் (ஆங்கிலம்: Dângrêk Mountains, Chuor Phnom Dângrêk; தாய்: ทิวเขาพนมดงรัก, Thiu Khao Phanom Dongrak கெமர்: ជួរភ្នំដងរែក); என்பது கெமரில் உள்ள தாழ்பிரதேச மலைத்தொடர் ஆகும்.
இதன் சராசரி உயரம் 500 மீட்டர்கள். இம்மலைத் தொடர் கம்போடியா - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ளது. டாங்கிரெக்கின் பெரும் பகுதி வடக்கு கம்போடியாவில் உள்ளது. இதன் அதிகூடிய உயரம் கடல் மட்டத்தில் இருந்து 753 மீட்டர்கள் (2,470 அடி) ஆகும்.
பொது
[தொகு]டாங்கிரெக் மலைகள் வடக்கு தாய்லாந்தில் மேக்கொங் ஆற்றிலிருந்து மேற்குத் திசையாக 200 மைல்கள் (320 கிமீ) தூரம் பரந்திருக்கிறது[1].
புகழ்பெற்ற கெமர் இந்து சிவன் கோயிலான பிரசாத் பிரா விகார் இம்மலைகளில் கம்போடிய எல்லையில் அமைந்துள்ளது.